• Jun 12 2026

இது காமெடி வேடமா.? சிங்கப் பெண்ணாக மாறிய கூல் சுரேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறியப்படும் கூல் சுரேஷ், தனது தனித்துவமான பேச்சு மற்றும் பரபரப்பான பப்ளிசிட்டி நிகழ்வுகளால் அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருபவர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் சிங்கப்பெண் சிறப்பு படை (Women Special Force) உடையை போன்ற சீருடையை அணிந்து, அதே நேரத்தில் பெண்கள் வேடத்தில் தோற்றமளித்து கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த தோற்றம் நிகழ்ச்சியில் இருந்தவர்களையும், சமூக வலைதள பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராணுவத்துறையுடன் தொடர்புடைய சீருடை மற்றும் பெண்கள் பாதுகாப்பு படையின் தனித்துவமான அடையாளங்களை காமெடி நோக்கில் பயன்படுத்தியதாக கூறப்பட்டதால், பலரும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். “இது உணர்வுகளை பாதிக்கும் செயல்” என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், சில ரசிகர்கள் இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கூல் சுரேஷ், தான் அவர்களுக்கு ஆதரவாக தான் களமிறங்கி உள்ளேன். இதில் தப்பு ஒன்றும் இல்லை. பார்க்கும் நீங்கள் தான் தவறாக பார்ப்பதாக தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.  இருப்பினும், அவரது இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement