• Jun 12 2026

சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா.?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சூர்யா - த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ஃபேண்டசி ஆக்ஷன் திரைப்படம் கருப்பு, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

4 வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடிய இப்படம், இப்போது தனது திரையரங்க பயணத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்ற ‘கருப்பு’, உலகளவில் சுமார் 306.47 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் இப்படம் 195.18 கோடி நெட் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சுமார் 80.90 கோடி வசூல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், 28வது நாளில் மட்டும் படம் இந்தியாவில் சுமார் 37 லட்சம்  வசூல் செய்துள்ளது. இது முந்தைய நாளை விட சுமார் 14% குறைவாகும். தமிழ்நாட்டில் மட்டும் அந்த நாளில் அதிகபட்சமாக சுமார் 30 லட்சம் வசூல் கிடைத்துள்ளது.

முதல் வாரத்தில் இந்த படம் 113.85 கோடி வசூலுடன் அதிரடி தொடக்கத்தை பெற்றது. இரண்டாம் வாரத்தில் 54.30 கோடியும், மூன்றாம் வாரத்தில் 21.20 கோடியும் வசூலாகியுள்ளது.

28வது நாளில் சுமார் 877 ஷோக்களில் படம் திரையிடப்பட்டதாகவும், மாலை மற்றும் இரவு காட்சிகளில் ரசிகர்கள் வருகை அதிகமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ‘கருப்பு’ திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக Amazon Prime Video ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் திரையரங்க அனுபவத்தை தவறவிட்ட ரசிகர்கள் வீட்டிலிருந்தே படத்தை பார்க்கலாம்.

சூர்யா–த்ரிஷா கூட்டணியும், ஃபேண்டசி ஆக்ஷன் கதைக்களமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ஓடிடியிலும் படம் புதிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement