• Apr 07 2026

வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணனின் 'லீடர்'... படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ வசூல் விபரம்

shali / 1 day ago

Advertisement

Listen News!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வெளியான லீடர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், பாயல் ராஜ்புத், ஷியாம், லால், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


அதன் வசூல் குறித்து படக்குழு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கதையின் எளிமை, குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளன.

இதன் காரணமாக, முதல் மூன்று நாட்களிலேயே இந்த படம் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அதிகமான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்தது இந்த வசூல் உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement

Advertisement