• Jun 12 2026

இறுதி விடை கொடுக்க முடியாமல் துடித்த ராதிகா…! அந்த நிமிடத்தில் நடந்தது என்ன?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனை உணர வைத்த இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு பலருக்கும் நீங்கா சுவடுகளாக மனதில் பதிந்துள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் அவருடைய சொந்த ஊரிலேயே இடம்பெற்று உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர்கள், ரசிகர்கள் , அரசியல்வாதிகள் என பலரும் உடைந்த மனதுடன் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இறுதி சடங்கு நிகழ்வில் திரையுலகம் முழுவதும் திரண்ட நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் மிகுந்த சோகத்தில் உடைந்து அழுத காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

திரையுலகில் தன்னை அறிமுகப்படுத்திய குருவாக பாரதிராஜாவை எப்போதும் “அப்பா” என்று அன்போடு அழைக்கும் ராதிகா, இறுதி மரியாதை செலுத்த வந்த தருணத்தில் கண் கலங்கிய நிலையில் அவரது உடலருகே நீண்ட நேரம் நின்று அஞ்சலி செலுத்தினார்.

அவரது துயரத்தை பார்த்த சக நடிகர்கள் நிழல்கள் ரவி மற்றும் இயக்குநர் சமுத்திரகனி அவரை அணைத்து ஆறுதல் கூறினர். அந்த உருக்கமான காட்சி அங்கு இருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக திரையுலகில் நெருக்கமான உறவைப் பகிர்ந்து வந்த இந்த பாசப்பிணைப்பு, இறுதி விடை தரும் தருணத்தில் மேலும் உணர்ச்சிகரமாக வெளிப்பட்டது.

பாரதிராஜாவின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பாக இருந்தாலும், அவரது மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கண்ணீர் அவரது தாக்கத்தை வெளிப்படுத்தியது.

மேலும் நடிகர் வடிவேலுவும் பாரதிராஜாவின் இறுதி தருணத்தில் அவருடைய பாதத்தில் விழுந்து அழுத காட்சிகளும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது

Advertisement

Advertisement