• Jun 14 2026

தண்ணீரை தேடிய கிராமத்தின் கதை... ஓடிடியில் களமிறங்கும் 'கெணத்த காணோம்'.!

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் யோகி பாபு நடிப்பில் நகைச்சுவை, மர்மம் மற்றும் சமூக கருத்துகளை இணைத்து உருவான 'கெணத்த காணோம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

இப்படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் கிராம மக்கள், பல முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, கோவில் பூசாரியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு நிலப்பகுதியை நம்பிக்கையுடன் அணுகுகிறார்கள். அதன்பிறகு நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் கோவில் சிற்பியாக மணிவாசகம் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். கிராமத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமைகிறது.

இப்படத்தில் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படம், அதன் பின்னணி இசைக்காகவும் கவனம் பெற்றது.

திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சமூக பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்ற படம் என்ற பாராட்டும் கிடைத்தது.

இந்த நிலையில், 'கெணத்த காணோம்' திரைப்படம் வரும் ஜூன் 16 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement