தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாகவும், நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படம், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் புதிய திருப்பத்தை சந்தித்தது.
அதன்பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷாலே ஏற்றுக்கொண்டார். கதை ரவி அரசுவுடையதாக இருந்தாலும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை விஷால் கவனிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீது ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.

ஏற்கனவே கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ‘மகுடம்’ டீசர் ஜூன் 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர், விஷால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பல தடைகளை கடந்து உருவாகியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் எந்த மாதிரியான அனுபவத்தை கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
After nurturing this dream for 30 years, today my official directorial debut finally steps into the spotlight!
Countless battles. One vision. Today, the crown rises 👑
Proud and super excited to unveil the TEASER of #Magudam / #Makutam.
A Film built with conviction.
A…
Listen News!