தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன், குடும்ப வாழ்க்கையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 'போடா போடி', 'நானும் ரெளடி தான்' உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய அவர், முன்னணி நடிகையான நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் என்ற இரட்டை மகன்கள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, தங்களது குடும்பத்தின் அழகான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக மகன்களுடன் செலவிடும் நேரத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
அந்த வகையில், தற்போது விக்னேஷ் சிவன் தனது மகனுடன் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் தந்தை-மகன் ஜோடி மிகவும் ஸ்டைலிஷாகவும், கியூட்டாகவும் காணப்படுகின்றது.
மகனின் குறும்புத்தனமான முகபாவனைகளும், விக்னேஷ் சிவனின் அன்பான தருணங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் "செம கியூட்" என பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Listen News!