இசையமைப்பாளராக இருந்து நடிகராக வெற்றிகரமாக பயணித்து வரும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி உடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் 'நூறு சாமி'.
இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைத் தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிகை சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளியீட்டுக்கு முன்பே பல பிரபலங்களின் பாராட்டைப் பெற்றிருந்த இப்படம், குறிப்பாக இயக்குநர் சுதா கொங்கரா உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்களை Sacnilk வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 1,200 காட்சிகளில் திரையிடப்பட்ட 'நூறு சாமி' திரைப்படம் முதல் நாளில் ரூ.80 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ள இந்த தொடக்கம் படக்குழுவுக்கு நம்பிக்கையளித்துள்ளது. மேலும், படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்வதாலும், குடும்ப ரசிகர்களின் வருகை அதிகரித்து வசூல் மேலும் உயரக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Listen News!