• Jun 20 2026

சூர்யா - மோகன்லால் கூட்டணியில் வெடித்த புது சர்ச்சை!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது தனது அடுத்தடுத்த திரைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ‘கருப்பு’ திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ‘சூர்யா 47’ ஆகிய படங்கள் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், முதல் நாளிலேயே சிறப்பான வசூலைப் பெறும் என திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன.


இதற்கிடையில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 47’ திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் அந்த தகவல்களுக்கு தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “இன்னும் ‘சூர்யா 47’ படத்தின் முதல் போஸ்டரே வெளியாகவில்லை. அதற்குள் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. நடிகர் மோகன்லால் இந்த படத்தில் இல்லை.” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே பரவியிருந்த வதந்திகளுக்கு முடிவு கிடைத்துள்ளது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement