• Jun 21 2026

ஜீவா - ராஜேஷ் கூட்டணி மீண்டும் ஹிட் ஆகுமா? ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ டீசர் வெளியீடு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்களுக்கு தனித்துவமான அடையாளம் பெற்ற இயக்குநர் ராஜேஷ் மற்றும் நடிகர் ஜீவா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இந்த கூட்டணி, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்ற புதிய படத்தின் மூலம் திரையில் களமிறங்கியுள்ளது. ஜீவா தனது 47வது படமாக நடிக்கும் இந்த படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்து வருகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமான பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் இன்று காலை 11.11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நேரத்தில் டீசர் வெளியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


வெளியான டீசரில் ராஜேஷ் - ஜீவா கூட்டணி மீண்டும் தங்களது பழைய நகைச்சுவை பாணியை கையில் எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. குடும்பம், காதல் மற்றும் சமூக சூழ்நிலைகளை நகைச்சுவையாக கலந்துள்ள காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

அதே நேரத்தில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஒரு காட்சியில் தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சராக திகழும் விஜய் பற்றிய காட்சிகள்  இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இது முழுமையாக திரைப்படத்தின் கதை சார்ந்த கற்பனைப் பகுதி என படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக் கூட்டணியின் இந்த புதிய முயற்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எவ்வளவு பூர்த்தி செய்யும் என்பது தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பான விவாதமாக உள்ளது.

Advertisement

Advertisement