• Jun 20 2026

தன் பாடலைக் கேட்டு முகத்தைச் சுளித்த ஸ்ருதி ஹாசன்? இணையத்தில் வெளியான வீடியோ.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர். திரைப்படங்கள் மட்டுமின்றி, தனது இசை மற்றும் தனிப்பட்ட தருணங்களையும் ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், ஸ்ருதி ஹாசன் தான் பாடியுள்ள “பவள மல்லி” பாடலைக் கேட்டு அதற்கு தனது ரியாக்சனை வெளிப்படுத்தியுள்ளார். மகிழ்ச்சியுடன் அவர் காட்டிய அந்த முகபாவனைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக, ரசிகர்கள் ஹார்ட் எமோஜிகள் மற்றும் கமெண்ட்ஸ்களை நிரப்பி வருகின்றனர். 

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஸ்ருதி ஹாசன், இந்த வீடியோவின் மூலம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement