• Jun 21 2026

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா.? ரசிகர்கள் கண்டுபிடித்த புதிய க்ளூ.. வைரலாகும் வீடியோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனது நடிப்பு திறமையாலும், தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் தொடர்ந்து கவனம் பெற்று வரும் அவர், திரையுலகில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையாலும் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடமிருந்து பிரிந்தார். இவர்களின் விவாகரத்து தென்னிந்திய திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. 

அதன்பின்னர் நாக சைதன்யா தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய நிலையில், சமந்தாவையும் சுற்றி பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான "எங்கள் தங்கம்" திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்வில் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. படத்தின் முதல் நாள் வரவேற்பால் உற்சாகமடைந்த அவர், நெருங்கியவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.


ஆனால், அந்த கொண்டாட்ட புகைப்படங்களில் சமந்தாவின் தோற்றமே தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக அவர் அணிந்திருந்த உடை மற்றும் சில கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட மாற்றத்தை சுட்டிக்காட்டி பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து, சமந்தா கர்ப்பமாக உள்ளாரா?, இது பேபி பம்ப்பா? என்ற கேள்விகள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன. சில ரசிகர்கள் அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

அதேவேளையில், இது வெறும் புகைப்பட கோணம் அல்லது உடையின் தோற்றம் காரணமாக உருவான யூகமாக இருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சமந்தா தரப்பிலிருந்தோ அல்லது அவருடன் தொடர்புடையவர்களிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தற்போது ஊகங்களாகவே பார்க்கப்படுகின்றன.

ஒரு சாதாரண வெற்றி கொண்டாட்டமாக தொடங்கிய நிகழ்வு, தற்போது சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்ட புதிய விவாதமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மை என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

Advertisement

Advertisement