• Jun 21 2026

விஜயா வீட்டில் நடந்த கலவரம்.. இறுதியில் சிந்தாமணி சொன்ன அந்த வார்த்தை.? வெளியான ப்ரோமோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் இந்த சீரியல்களுக்கு தனி வரவேற்பு காணப்படுகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அடுத்த வாரத்தில் ஒளிபரப்பாக உள்ள எபிசோடுகளின் புதிய கதைக்களம் மற்றும் முக்கிய திருப்பங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

அதன்படி எதிர்வரும் வாரத்தில் என்ன நடக்கப் போகிறது, எந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படுகிறது, என்னென்ன அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜயாவின் வீட்டிற்கு வந்த சிந்தாமணியின் அடியாட்கள் கலாட்டா செய்கின்றார்கள்.


மேலும் அதனுடன் சிந்தாமணியும் அவருடைய கணவரும் வந்து, என்னுடைய மகளை எங்கே கடத்தி வைத்திருக்கின்றீர்கள்? உங்களுடைய குடும்பத்தை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டுகின்றார். 

அந்த நேரத்தில் விஜயா, உன் பொண்ணு எவன் கூடையோ ஓடிப் போனா இங்க வந்து கேட்பியா? நீ எனக்கு செஞ்ச துரோகத்துக்கு தான் இப்படி எல்லாம் அனுபவிக்கிற என்று பேசுகின்றார்.

அத்துடன் முத்துவும், காதலிச்ச இரண்டு பேரை சேர்த்து வைக்கிறதுதான் நியாயம் என்று கூற, நீ எப்படி அவங்களை சேர்த்து வைக்கிறாய் என்று பார்ப்போம் என சிந்தாமணி சவால் விட்டு செல்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ 

ஏற்கனவே ரேகா, சத்யாவுக்கான திருமண வேலைகளில் முத்துவும் மீனாவும் ஈடுபடுகின்றார்கள். எனவே தற்போது சவால் விட்டுச் சென்ற சிந்தாமணியை மீறி ரேகாவுக்கு சத்யாவுடன் திருமணம் செய்து வைப்பாரா முத்து ? அல்லது சிந்தாமணி தன்னுடைய மகளை சத்யாவிடமிருந்து பிரித்து கூட்டிக்கொண்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement