• May 28 2026

காந்தாரா கிளைமாக்ஸ், விஜய் கேட்ட ஒரு கேள்வி .. சூர்யாவுக்கு 250 கோடி ஹிட் கொடுத்ததா?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான “கருப்பு” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கருப்பு படத்தின் உருவாக்கப் பின்னணி குறித்து ஆர்.ஜே. பாலாஜி சமீபத்திய பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விஜயின் கருத்துகளும், “காந்தாரா” படத்தின் தாக்கமும் முக்கிய பங்கு வகித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி விஜய் குறித்து ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், உண்மையிலே ‘கருப்பு’ படம் விஜய் சாருக்காக தான் எழுதப்பட்டது. அவர் அரசியலுக்குள் போகிறதுக்கு முன்னாடி இதுதான் கடைசி படம் இருக்கணும்னு தான் ஆரம்பத்துல பிளான் பண்ணோம். அவரை போய் சந்திச்சு கதை சொன்னோம். அவர் சில காரணங்களால பண்ண முடியலன்னு சொன்னார். அவர் சொன்ன காரணங்கள் எல்லாம் நியாயமா இருந்தது. அதனால நான் அவர்கிட்ட, ‘சார் உங்கள் முடிவை முழுசா மதிக்கிறேன், தேங்க்ஸ்’ன்னு சொன்னேன்.


அதோட கதை கேட்டுட்டு ஒரு வாரம் கழிச்சு சொல்லுறேன்னு விஜய் சார் சொன்னார். பிறகு சில காரணங்களால இது பண்ண முடியாதுன்னு சொன்னார். நான் அதையும் முழுசா ரெஸ்பெக்ட் பண்ணேன்.

ஆனாலும் அந்த கதையை கேட்டப்போ அவர் சில முக்கியமான கேள்விகள் கேட்டார். அந்த கேள்விகளுக்கு பதில் தேடும்போது தான் ஸ்கிரிப்ட் இன்னும் பலமாக மாறிச்சு. அதுதான் படத்துக்கு அதிக எமோஷனல் டெப்த் கொடுத்தது.. 

மேலும், கருப்பு கிளைமாக்ஸ் காட்சி நான் சரியில்லன்னு நினைச்சேன். அப்புறம் ‘காந்தாரா’ படம் பார்த்தேன். அந்த கடைசி 10 நிமிஷம் தியேட்டர்ல மக்கள் ஒரு டிரான்ஸ்ல போற மாதிரி இருந்தாங்க. அந்த அனுபவம்தான் என்னை ரொம்ப பாதிச்சது. அதுவே ‘கருப்பு’ பட கிளைமாக்ஸ் ஐடியாவை கொடுத்தது...என்றார்..

பின்னர் இந்த கதை தயாரிப்பாளர்கள் மூலம் நடிகர் சூர்யாவிடம் சென்றதாகவும், அவர் படத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது “கருப்பு” திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement