• Jun 24 2026

அட்ரா சக்க..! தலைவர் 173 படத்தின் பெயரை பார்த்தீங்களா.? ஹாட் அப்டேட் இதோ..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகிய இருவரும் ஒன்றாக இணையும் படம்தான் தலைவர் 173. இந்த படம் தொடர்பிலான புதிய அப்டேட்டுகள் ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இந்த படத்தை முதலில் கே.எஸ். ரவிக்குமார் இயக்க இருந்தார், பின்னர் சுந்தர்.சி, அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என தொடர்ந்து இயக்குநர்களின் பெயர்கள் மாறிக் கொண்டே இருந்தது.

இதனால், தலைவர் 173 படத்தை யார் தான் இறுதியாக இயக்கப் போகிறார்? என்ற கேள்வி எழுந்தது. இறுதியில் ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் நட்சத்திரங்களான ரஜினி–கமல் இணைப்பு என்பதால், இந்த திட்டம் ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.


மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. அதேபோல் மலையாள நடிகர் பாசில் ஜோசப், ரஜினிகாந்தின் மகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவின் நடிகர் பட்டியல் மேலும் பிரம்மாண்டமாகி வருகிறது

இசை அமைப்பாளராக அனிரூத் ரவிச்சந்தர் இணைந்துள்ளதால், படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 173-வது திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. 

Advertisement

Advertisement