ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள தனது 173வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், டர்மரிக் மீடியாவும் இணைந்து தயாரிப்பில் களமிறங்கியுள்ளன. ரஜினி – கமல் கூட்டணி நேரடியாக திரையில் இல்லாவிட்டாலும், இந்த இரண்டு ஜாம்பவான்களின் பெயர்கள் ஒரே திட்டத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில், நரம்புகள் புடைத்துக் காணப்படும் ஒரு வலிமையான கை போன்ற காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் படத்தின் கதைக்களம் ஆக்ஷன், பழிவாங்கல் மற்றும் மாஸ் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. மேலும், படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Listen News!