• Jun 24 2026

அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஒரே போடாய் போட்ட யுவன்..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் புதிதாக உருவாகும் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். தயாரிப்பு பொறுப்பை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.

குறித்த படத்தில் இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்திருப்பது படத்தின் முக்கிய ஈர்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த விழாவில் பேசிய யுவன் சங்கர் ராஜா, படம் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், இந்த படம் வழக்கமான கமர்ஷியல் படங்களை விட மாறுபட்ட காட்சியமைப்புடன் உருவாகி வருகின்றது.. மேலும் இசை ரீதியாகவும் புதிய முயற்சிகள் இடம்பெற இருப்பதாகவும், இதுவரை முயற்சிக்காத ஒரு “புதிய இசை வகை” இதில் கொண்டு வர முயற்சிக்கிறேன் என்றும் கூறினார்.


தனது பணிச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசும்போது, யுவன் சங்கர் ராஜா ஒரு முக்கிய விஷயத்தையும் பகிர்ந்தார்.

தான் தற்போது துபாயில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதாகவும், குறிப்பாக தனது மகள் அங்கு படித்து வருவதால் அங்கு இருப்பது அதிகமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், தனது திரைப்பட பணிகளுக்காக சென்னை தொடர்ந்து வந்து செல்லும் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

திரைப்படங்கள் தாமதமாகும் விவகாரம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா, அதற்கு தன்னுடன் நேரடி தொடர்பு இல்லை, நான் பணியாற்றும் திரைப்படங்கள் தாமதமாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

தனது பணி நேரம் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இசை பணிகளை நிறைவேற்றுவதாகவும் அவர் கூறினார்.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. புதிய இயக்குநர் சித்தார்த் முதல் படமாக இதை இயக்குகிறார் என்பதால், இந்த கூட்டணி மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement