• Jun 22 2026

முதலமைச்சர் விஜய்யை த்ரிஷா புறக்கணித்தாரா? பிறந்தநாளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது பிறந்தநாள் இந்த ஆண்டு மேலும் சிறப்பாக கவனம் பெற்றுள்ளது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்த சூழலில், நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இருவரையும் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகியும் வருகின்றன. 

இதனால், ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளில் த்ரிஷா வெளியிடும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு அவர் வெளியிடக்கூடிய வாழ்த்து பதிவு எப்படியிருக்கும், அது சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

இருப்பினும், இதுவரை த்ரிஷா தரப்பிலிருந்து எந்த வாழ்த்து பதிவும் வெளியாகவில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

Advertisement

Advertisement