• Jun 23 2026

மாமனாரின் பேச்சைக் கேட்டு மீண்டும் சிக்கலில் சிக்கும் செந்தில்... வெறுப்பில் மீனா!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பழனி கோமதி வீட்ட சுகன்யாவைக் கூட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். பின் வீட்டுக்கு வந்த சுகன்யா கோமதியைப் பார்த்து சரவணனோட விஷயம் என்ன மாதிரி போச்சு என்று கேட்கிறார். அதுக்கு கோமதி எப்படி ஜோசிச்சாலும் சரவணனோட வாழ்க்கை என்னவாகப் போகுது என்று ஒரே குழப்பமாவே இருக்கு என்கிறார். அதைத் தொடர்ந்து பழனி என்னாலேயே நீங்க ஜெயிலுக்கு போனதை தாங்கிக்க முடியல சரவணன் எப்படி தங்குவான் என்று கேட்கிறார்.

மேலும், மயிலுக்கும் சரவணனுக்கும் விவாகரத்து நடக்கட்டும் என்கிறார் பழனி. அதைக் கேட்ட கோமதி சரவணன் சந்தோசமா இருந்தாலே போதும் என்கிறார். மறுபக்கம் மீனா செந்தில் வச்சிருந்த பணத்தைப் பற்றி ஜோசிச்சுக் கொண்டு ஒழுங்கா வேலை செய்யாமல் இருக்கிறார் மீனா.


அதைத் தொடர்ந்து செந்தில் மீனாவோட அப்பாவைப் பார்த்து நீங்க சொன்ன மாதிரி ஆபிஸில் வாங்கி வைச்சிருந்த பணத்தை மீனா பார்த்திட்டாள் என்று சொல்லுறார். மேலும் அது என்னோட ஷேவிங் பணம் என்று தான் சொன்னேன் ஆனா, அவள் அதை நம்பேல என்கிறார். 

அதைக் கேட்ட மீனா அப்பா இது சின்ன விஷயம் இதுக்கு எல்லாம் ஏன் பயப்படுறீங்க என்று சொல்லுறார். பின் பணத்தை எல்லாம் மீனா அப்பா தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து கதிர் ராஜி கிட்ட சரவணன் பற்றி சொல்லிக் கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement