• Jun 24 2026

சீக்கிரமே கோடிஸ்வரனாக இதுதான் வழி..? கண்டிஷன் போட்ட மனோஜ்.. ரோகினியை அதிர வைத்த கிரிஷ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த மனோஜ், விஜயாவுடன் தனியாக பேச வேண்டும் என்று அவரை ரூமுக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு, "நான் இனிமேல் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்றால் எனக்காக இதை செய்ய வேண்டும்" என்று ஒரு கண்டிஷன் போடுகிறார்.

அதன்படி, விஜயாவும் ஆர்வத்துடன் என்னவென்று கேட்க, தனக்கு ஒரு நியூமராலஜிஸ்ட், என்னுடைய பெயரை மாற்றினால் நான் கோடீஸ்வரன் ஆகிவிடுவேன் என்று கூறியதாக சொல்கிறார்.

மேலும், என்னுடைய பெயருக்கு முன்பு ஒரு புனைப் பெயரை அவர் வைத்துள்ளதாக தெரிவிக்கிறார். விஜயாவும் அது என்ன பெயர் என்று கேட்க, "பப்பரப்பா" என்று கூறுகிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

ஆனாலும், மனோஜ் இவ்வாறு என்னை எல்லோரும் அழைத்தால் நான் கூடிய விரைவில் பணக்காரனாவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இதனால் விஜயாவும் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒரு விஷயம் கூற வேண்டும் என்றும், இனிமேல் மனோஜை "பப்பரப்பா மனோஜ்" என்று அழைக்குமாறும் கூறுகிறார்.


இதைக் கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். மேலும், அண்ணாமலை, "நீ படித்த அளவிற்கு இதையெல்லாம் நம்புவாயா?" என்று திட்டுகிறார். ஆனாலும், தன்னை இவ்வாறுதான் கூப்பிட வேண்டும் என்று மனோஜும் விஜயாவும் கண்டிஷன் போடுகின்றனர்.

இன்னொரு பக்கம், வீட்டிற்கு வந்த ரோகினியிடம் அவருடைய அம்மா ஒரு அதிர்ச்சி தகவலை கூறுகிறார். அதன்படி, கிரிஷ் ஸ்கூலில் பொய் சொல்வதாகவும், சக மாணவர்களை அடிப்பதாகவும், இதனால் டீச்சர் கடுமையாக கண்டித்ததாகவும் கூறுகிறார்.

மேலும், கிரிஷின் நடவடிக்கை இவ்வாறு தொடர்ந்தால், அவரை டிசி எடுத்து வேறு பள்ளியில் சேர்க்குமாறு ஆசிரியர் எச்சரித்து அனுப்பியதையும் தெரிவிக்கிறார்.

இதனால் கோபமடைந்த ரோகினி, கிரிஷிடம், "நீ யாரைப் பார்த்து பொய் பேச கற்றுக்கொண்டாய்? உனக்கு இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது?" என்று திட்டுகிறார்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில், இவை அனைத்தையும் உன்னிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன் என்று கிரிஷ் பதிலளித்து அதிர்ச்சி கொடுக்கிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement