தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் ‘தர்மன்’. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்ட இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் தலைப்பு அறிவிப்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் பேசுகையில், “நான் கதையே கேட்காமல் இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று கமல் ஹாசன் கூறியது என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது. எங்களின் நட்பு பல தசாப்தங்களை கடந்த ஒன்று. கமல் எனக்கு செய்த உதவிகள், அளித்த ஊக்கங்கள் குறித்து எவ்வளவு பேசினாலும் போதாது. அவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்,” என்றார்.
மேலும், “‘தர்மன்’ திரைப்படத்தின் வெற்றியே எங்கள் ஒரே இலக்கு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் உருவாகும். நாளை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது,” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்திய சினிமாவின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்கள் மீண்டும் ஒரே திட்டத்தில் இணைந்துள்ளதால், ‘தர்மன்’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
Listen News!