• Jun 23 2026

மீண்டும் அதே காதலா? வெளியானது ‘மீசைய முறுக்கு 2' படத்தின் புதிய அப்டேட்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மனதை கவர்ந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது ‘மீசைய முறுக்கு’. 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்தார். 

இசை, நட்பு, காதல் மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஆதியின் திரைப்பயணத்திலும் முக்கியமான இடத்தைப் பிடித்தது.


தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு-2’ உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருப்பதுடன் இசையமைப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை குஷ்பு அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன.

படத்தில் ஆதியுடன் பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் முதல் பாடலான ‘அடி போடி’ நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement