• Sep 21 2024

நீங்க ஏழை என்றால் நான் பிச்சைக்காரனா?- ஆரம்பமாகிய ராங்கிங் டாஸ்க்- முட்டி மோதிக் கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 1

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இன்றைய தினம் ராங்கிங் டாஸ்க் நடைபெறுகின்றது. அதில் முதலாவது நிலை டைட்டில் வின்னருக்கான ராங் ஆகவும் 15வது ராங் எலிமினேஷாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர்.அப்போது பிரதீப் முதலாவது இடத்தில் நிற்பதால் எல்லோரும் திட்டுகின்றனர்.அப்போது நிக்ஷன் நீங்க எதுவுமே பண்ணல என்று சொல்ல பிரதீப், நீ பாடியிருக்கிறதை விட நான் நிறையப் பாடி இருக்கிறேன் என்பதை நம்புகின்றேன் என்று சொல்கின்றார்.

பதிலுக்கு ஐஸ்வர்யாவும் பிரதீப்பை திட்ட, நீங்க எல்லாம் ஏழைகள் என்றால் நாங்க அப்போ யாரு, பிச்சைக்காரனா? நான் இன்டஸ்ரில முன்னுக்கு வருவதற்கு எனக்கு இந்த இடம் வேணும் என்று நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்


Advertisement

Advertisement