• Jan 19 2025

என்கிட்ட மூணு பாயிண்ட்ஸ் இருக்கு... அவனுக்கு ரெட் கார்ட் வாங்கி கொடுக்கலாம்! அதுக்கு தானே நானும் துடிக்கிறேன்! நிக்சனுக்கு அடுத்த ஆப்பு ரெடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிய பிரதீப் ஆண்டனி பொய்யான குற்றசாட்டுகளால் ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். தற்போது அவரைப் போலவே நிக்சனை வெளியேற்ற சக போட்டியாளர்கள் துணிந்துள்ளனர்.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பிரதான போட்டியாளராக காணப்பட்ட பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதன்படி பிஜே பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை, அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்.


இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூடஇ பலரும் அவருக்கு ஆதரவாக தான் தொடர்ந்தும் பேசி வருகிறார்கள். 

எனினும், பிக் பாஸ் வீட்டில் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என அறிவிக்கப்பட்ட போது பிரதீப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது நடைபெறவில்லை.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிலுள்ள ரவீனாவும், மணியும் சேர்ந்து நிக்சனை வெளியேற்ற பிளான் போட்டு வருகின்றனர். இவர்கள் கதைத்துக் கொண்டிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


அதன்படி குறித்த வீடியோவில், நிக்சனுக்கு அழகா 3 ஸ்ரைக் வாங்கிடலாம். என்கிட்ட 3 பாயிண்ட்ஸ் இருக்கு என ரவீனா சொல்ல, என்கிட்டையும் இருக்கு நான் ரெட் கார்டே வாங்கி தர முடியும் என மணி சொல்லுகிறார். ரெட் கார்ட்டா? எப்படி? என ரவீனா கேக்க, அதனால தானே நான் இவ்வளவு துடிக்கிறன் என மணி சொல்லுகிறார்.

இவ்வாறு பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பியது போல தற்போது நிக்சனுக்கும் பிளான் போடுகிறார்கள். இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இருவரையும் திட்டித் தீர்க்கின்றனர்.




Advertisement

Advertisement