• Jan 19 2025

சௌந்தர்யாவை பார்த்து வளர்ந்தவள் நான்.. எனது கனவு இது தான்! ராஷ்மிகா ஓபன் டாக்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

கர்நாடக நடிகையான சௌந்தர்யா 'பொன்னுமணி' படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் அந்த காலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா, அர்ஜுனனுடன் மன்னவரு சின்னவரு, விக்ரமுடன் கண்டேன் சீதையை, விஜயகாந்த் உடன் சொக்கத்தங்கம், தவசி, பார்த்திபனுடன் இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உச்ச நடிகையாகவே திகழ்ந்து வந்தார்.

தமிழில் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாக காணப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் மர்மமாகவே காணப்படுவதாக தற்போது வரை தகவல்கள் பரவி வந்தன. அதுமட்டுமின்றி அவருடைய வாழ்க்கையை படமாக்குவதற்கும் கன்னட திரை  உலகில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கையை படமாக்கினால் அவருடைய கேரக்டரில் நான் நடிப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கூறுகையில், சௌந்தர்யாவின் வாழ்க்கை படமானால் அவருடைய கேரக்டரில் நான் நடிப்பேன் என்று எல்லா நடிகைகளுக்கும் இருக்கும் ஏக்கம் எனக்கு உள்ளது. மறைந்த நடிகையின் சௌந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் சௌந்தர்யாவாக நடிக்க ஆசை இருக்கின்றது. அது எனது கனவு.

சௌந்தர்யாவின் படங்கள் ஒன்று விடாமல் பார்ப்பேன். அவரது படங்களை பார்த்து வளர்ந்து இப்படி முன்னணி கதாநாயகியாக உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு சௌந்தர்யாவின் சாயல் இருப்பதாக பலரும் பேசுகின்றார்கள். அதனால் சௌந்தர்யாகவே நடிக்க ஆசை அதிகமாக இருக்கின்றது. வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நான் நடிக்க தயாராக இருக்கின்றேன் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement