• Aug 03 2025

தளபதி பிறந்தநாளன்று சம்பவம் உறுதி..! "ஜனநாயகன்" பட மாஸ் அப்டேட் இதோ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் h. வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் ,பூஜா ஹெட்ஜ் ,பொப்பி தியோல் நடித்து வருகின்றனர். விஜயின் இறுதி படம் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும் இந்த படத்தினை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். கோட் படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் உள்ளது.


இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் அதே நாளில் இரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த அப்டேட்டை அறிந்த விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் “படம் பொங்கலுக்கு வரட்டும் அதுக்குள்ள வெறித்தனமான பிஜி எடுப்போம்!” என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த படம் அரசியல் அதிகம் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement