• Dec 03 2024

இப்ப என்ன முடிவெடுக்க போறீங்க கோபி? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், புதிய ரெஸ்டாரண்டில் மேனேஜர் வேலைக்கு வாரீங்களா என கோபியை பாக்கியா அழைக்க, உன்ட ரெஸ்டாரண்டுல நான் பத்தில ஒரு ஆளா வேலை செய்யனுமா? அந்த அளவுக்கு நான் இன்னும் அதள பாதாளத்திற்கு போகல என்று கோபப்பட்டு பேச, ராதிகாவும் கோபிட இந்த நிலைமைய  குத்தி காட்டாதீங்க, அவர பார்த்துக்க நான் இருக்கன், அவர்ட நிலைம இப்படியே இருக்காது என கோபத்தை கொட்டி தீர்க்கிறார்.

மேலும் ரூமுக்கு சென்ற கோபி பாக்கியா பேசுவதை நினைத்து வருத்தப்பட,  இப்போ உங்களுக்கு சந்தோஷமா? நீங்களும் அவமானப்பட்டு என்னையும் அவமானப்பட வச்சிட்டீங்க என்று ராதிகா கோவப்படுகிறார். 

அதன்பின் கோபி, ராதிகா பக்கத்தில் உட்கார்ந்து இந்த ஆபீஸ க்ளோஸ் பண்ணும்போது எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா? யார்கிட்டயும் சொல்ல முடியல, உள்ளுக்குள்ளேயே போட்டு நரக வேதனை அனுபவிச்சிட்டு இருந்தேன். ஆனால் சீக்கிரமே ஒரு நல்ல வேலைக்கு போய் பழைய படி ஜெயிச்சு காட்டுவேன். உன்ன எப்படி பாத்துக்கிட்டனோ அப்படியே  சந்தோஷமா பாத்துப்பேன் என்ன சொல்ல, எனக்கும்  அந்த நம்பிக்கை இருக்கு, ஆனா நீங்க என் மேல நம்பிக்கை வைக்கல என ராதிகா கூறுகிறார்.


இதை அடுத்து நைட் ஈஸ்வரி தூங்காமல் அழுது கொண்டிருக்க ராமமூர்த்தி நம்மால் முடிந்ததை கோபிக்கு செய்வோம் என ஆறுதல் கூறுகிறார்.

மறுநாள் பாக்கியா அவர்களுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும் போது அவர்கள் இருவரும் டல்லாக இருப்பதை பார்த்து ரூமுக்கு சென்று தனது நகைகளை எடுத்து வருகிறார்.

அதன்பின், ஈஸ்வரியிடம் உங்க பையனுக்கும் எனக்கும் இடையில் எதுவுமே இல்ல ஆனாலும் அவர் கஷ்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கல என்று சொல்லி, இந்த  நகைகளை அவருக்கு கொடுக்குமாறு கொடுக்கிறார்.

ஆனால் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் அதை வேண்டாம் என மறுக்கவும் இல்லை இதை பிடிங்க என்று கொடுத்துச் செல்கிறார் பாக்கியா.

மறுபக்கம் கோபி வருத்தமாக இருப்பதை பார்த்து இனியா வந்து ஆறுதல் சொல்ல, செழியனும் நீங்க ஜாக்கிங் போகலையா இன்னைக்கு கண்டிப்பா போகணும் என்று அவரை அழைத்துச் செல்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement