• Jan 19 2025

தண்ணீரில் தத்தளித்த பிரபலங்கள்... விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை காப்பாற்றிய தீயணைப்பு குழுவினர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளத்தினால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் மக்களுக்கான விரைந்து பலரும் உதவி புரிந்து வருகின்றனர். டுவிட் போட்டதால் உயிர் காப்பாற்றப்பட்டது என பிரபல நடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.   


சில மணி நேரங்களுக்கு முன் நடிகர் விஷ்ணுவிஷால் தனது டுவிட் பக்கத்தில் "எனது வீட்டிற்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, காரபாக்கத்தில் நீர் மட்டம் மோசமாக உயர்ந்து வருகிறது. நான் உதவிக்கு அழைத்தேன் மின்சாரம் இல்லை, வைஃபை இல்லை, ஃபோன் சிக்னல் இல்லை ,மொட்டை மாடியில் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனக்கு சில சிக்னல் கிடைக்கும் சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக நான் பிராத்திக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.  


இந்நிலையில் தற்போது சென்னை காரப்பாக்கத்தில்  விஷ்ணுவிஷால் மற்றும் அமீர் கான் குடும்பத்தாரையும் தீயணைப்பு குழுவினர் காப்பாற்றியுள்ளார். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்ட இவர் இவாறு தகவல் பகிர்ந்துள்ளார். சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி, காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.. ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதைப் பார்த்தேன். இதுபோன்ற சோதனைக் காலங்களில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என டுவிட் செய்துள்ளார். 

Advertisement

Advertisement