• Jan 19 2025

நடிகை நமிதா குடும்பத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்! இரு குழந்தைகளுடன் தத்தளிப்பு! துரிதமாக விரைந்த மீட்புக்குழு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் தொடரும் அடைமழை மற்றும் புயலால் மக்கள் பெரிதளவில் பாதிக்கபட்டுள்ளனர். அதேபோல சினிமா நட்சத்திரங்களும் இன்னலுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில், நடிகை நமிதாவின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதோடு, அவருக்கு கைக் குழந்தைகள் இருப்பதால் அவர்களை மீட்பதற்கு மீட்புக் குழு விரைந்துள்ளது.


தற்போது, சென்னையில் விடாது தொடரும் மிக்ஜாம் புயலால் பல்வேறுபட்ட சாதாரண மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இவ்வாறான நிலையில், நடிகை நமிதா வசிக்கும் குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள பள்ளிக்கரணை நாராயணபுரம் என்ற ஏரியின் கரை உடைந்து, அங்கிருக்கும் குடியிருப்புகளை மொத்தமாக வெள்ளம் ஆட்கொண்டுவிட்டது.


இதை தொடர்ந்து, அந்த குடியிருப்பில் வசிக்கும் நடிகை நமிதா மற்றும் அவரது கணவர்,  இரண்டு குழந்தைகளை மீட்பதற்கு மீட்புக் குழுவினர் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement