• May 11 2024

காஜலின் குடும்பத்தில் இன்று நடைபெறவுள்ள விசேஷம்... வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் காஜல் அகர்வால். பரத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான 'பழனி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் இவர் இன்று விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார்.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் வெகுவாக வாய்ப்புகள் குறைந்தாலும் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்திலும் கமிட்டாகி நடிக்கின்றார். 

இவ்வாறாக படங்களில் தொடர்ந்தும் பிஸியாக இருந்து வரும் காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி மும்பையைச் சார்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு.


இவரைப் போன்றே இவரின் தங்கை நிஷா அகர்வாலும் பிரபல நடிகையாவார். இவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரின் மகன் இன்றைய தினம் தனது 1 வயதினைப் பூர்த்தி செய்து இருக்கின்றார். இதனை குடும்பத்தோடு இணைந்து மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றார்.


இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் காஜல் அகர்வாலும் தனது தங்கையின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்து இருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்களின் அக்கா, தங்கை ஒற்றுமையை பாராட்டி வருவதோடு தமது வாழ்த்துக்களையும் அக்குழந்தைக்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement