• May 10 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து இன்றைய தினம் வெளியாகவுள்ள மாஸ் அட்டேட்- அதற்காகத் தானே ரசிகர்கள் வெயிட்டிங்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ‘ராட்சஸ மாமனே’ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படமானது வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

இப்படத்தின் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ரகுமான், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தினர். 

இதில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டனர்.அதோடு அந்த விழாவில் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. 


இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘ராட்சஸ மாமனே’ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிரிக்கல் வீடியோ 5 மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.

இதனால் ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளதோடு இன்னும் பல அப்டேட்டுக்கள் வெளியாகவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement