• Apr 27 2024

பக்கவாதத்தால் திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- இரங்கல் தெரிவிக்கும் சீரியல் பிரபலங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது  ஹிட்லர், திதி,நிஷ்க்பாஸ் மற்றும் தெனாலிராமன் போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் பிரபல தொலைக்காட்சி நடிகை குபூல் ஹை நடிகர் நிஷி சிங்.


இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதன், மூன்றாண்டுகளாக இதற்குச் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிஷி சிங்கின்  கணவர்  அவரது இறப்பு குறித்து கூறியதாவது, சில வாரங்களுக்கு முன்பு, கடுமையான தொண்டை வலி இருந்தது. இதனால், திட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி அவருக்கு பிறந்த நாளின்போதும் அவரால் பேசமுடியவில்லை.  சில நாட்களாக கடுமையான போராட்டத்தைச் சந்தித்த அவர்  நேற்று பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement