பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள "எம்புரான்" படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதுடன் தற்போது வசூலில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.மேலும் படத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் காட்சிகளின் மீதான கவனம் இருந்தாலும் படக்குழு அவற்றை கவனித்து அவை படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் எம்புரான் படம் 11 நாட்களுக்குள் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை மஞ்சுமெல் பாய்ஸ் படம் 242 கோடி வசூலித்து மலையாள பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தில் இருந்தது ஆனால் தற்போது எம்புரான் படம் அதை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை எம்புரான் படத்திற்கு ஒரு பெரும் பாராட்டாகும் மேலும் மோகன்லாலின் அபாரமான நடிப்பும் பிரித்விராஜின் இயக்க திறனும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது இந்த படம் இந்திய சினிமாவில் மட்டுமின்றி உலகலாவிய ரீதியில் பல பரவலான பாராட்டுகளை பெற்று வருகின்றது.
Listen News!