• Jan 15 2025

ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிய பிரதீப்- பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7  இரண்டு வீடு என புதிய கான்செப்டுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது.


ஒருமாதம் கடந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியேற்றப்பட்டது குறித்து மக்கள் கலவையான கமெண்ட்ஸ் தான் கொடுத்து வருகிறார்கள். நிறைய பேர் அவருக்கு சாதகமாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ள பிரதீப் ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இனி பிக் போஸ் வீட்டில் இருக்கும் ஏனைய போட்டியாளர்களின் பங்கு எவ்வாறு இருக்கிறது என தொடர்ந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement