• Jan 19 2025

தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தை குழந்தைகள் பார்க்க அனுமதி இல்லை.. அதிர்ச்சி அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ’ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்றால் திரையரங்குகளில் 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க அனுமதி இல்லை என்ற நிலையில் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால்தான் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் சில காட்சிகளை குறைத்தால் ’யூஏ’ சான்றிதழ் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நடிகர், இயக்குனர்  தனுஷ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ’ஏ’ சான்றிதழ் பெற்றே படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அனுமதி இல்லை என்ற நிலையில் தொலைக்காட்சிக்கு என தனியாக சில காட்சிகளை கட் செய்து விட்டு ’யூஏ’ சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ ’காதல் கொண்டேன்’ ’அது ஒரு கனாக்காலம்’ ’புதுப்பேட்டை’ ’பொல்லாதவன்’ ’வடசென்னை’ ‘அசுரன்’ ‘ஜெகமே தந்திரம் ஆகிய படங்கள் ’ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement