• Dec 05 2023

நீதிமன்றமான பிக்பாஸ் வீடு; ராஜதந்திரமாக நகரும் ஹவுஸ்மேட்ஸ்! பிரதீப் விவகாரத்தில் நீதி கிடைக்குமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அடுத்தடுத்து கொடுக்கப்படும் டாஸ்க் தற்போது பார்ப்போருக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி தற்போது  பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வேண்டும் என்றாலும் வழக்கு  தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும்.

இந்த நிலையில், பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம் தொடர்பில் வழக்கு போடப்படுமா? நீதி கிடைக்குமா என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், விசித்ராவுக்கு எதிராக கானா பாலா மற்றும் மாயா ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல் பூர்ணிமா மீது விஷ்ணு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் பூர்ணிமா உடன் விஷ்ணு காரசார விவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. 

அத்துடன், இது தான் சந்தர்ப்பம் என போட்டி போட்டு வழக்குகளை நிச்சயம் மாயா டீம் முன்வைக்கும் என்பதை நாம் அறிவோம்.

அதேவேளை,  இதில் பிரதீப்பின் ரெட் கார்டு மேட்டருக்கு நீதி கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதேவேளைஇ இன்றைய எபிசோடிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement