• Apr 02 2025

குக் வித் கோமாளி 5 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்! ஆளில்லாமல் யூடியூப் மன்னனையும் குத்தகை எடுத்தாச்சா? இளம் ஹீரோயின் வேறு..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த சீசனும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

முதலாவதாக வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுவதாகவும் விரைவில் நல்ல செய்தி சொல்வதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.

அதன் பின் இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். இதனால் அடுத்த சீசன் நடக்குமா? இல்லையா? என்ற குழப்பம் காணப்பட்டது.


இதை தொடர்ந்து, தாமுவுக்கு ஜோடியாக மதம் ரங்கராஜ் இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியானது. நேற்றைய தினம் இதற்கான ப்ரோமோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 இல் பங்குபற்ற உள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல் கசிந்துள்ளது.


அதன்படி, பிரபல யூடுபரான இர்பான் குக் வித் கோமாளிக்கு வருவது உறுதியாகி இருக்கிறதாம், மேலும் நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா போன்றவர்களும் வர உள்ளார்களாம்.

அத்துடன்,  நடிகை திவ்யா துரைசாமி உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Advertisement

Advertisement