தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
அதிலும் தமிழ் பிக்பாஸின் 6வது சீசன் அக்டோபர் மாதம் 9ம் திகதி ஆரம்பமாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோக்கள் ஏற்கவே வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து சில தகவல்கள் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் பிரபல விஜய் டிவி நட்சத்திரம் அமுதவாணன் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பிரபல்யமானவர் என்பதோடு சமீபத்தில் முடிவடைந்த கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்-நிகழ்ச்சியில் பங்குபற்றி டைட்டிலை வின்னர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!