• Jan 19 2025

’பேட் நி்யூஸ்’: 2 ஆண்களால் கர்ப்பமான ’அனிமல்’ நடிகை.. 'ஜூலை 19ஆம் தேதி தீர்ப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இரண்டு ஆண்களால் கர்ப்பமான கதையம்சம் குறித்த திரைப்படத்தில் ’அனிமல்’ பட நடிகை நடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த ’அனிமல்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த திரிப்தி திம்ரி என்பவர் ’பேட் நியூஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்கி கெளசல் நாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வெளியான போது வந்த பாடலில் விக்கி கௌசல் மற்றும் திரிப்தி திம்ரி முத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பல காட்சிகளை நீக்க சொல்லியதாகவும் குறிப்பாக லிப் கிஸ் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இந்த படத்தில் திரிப்தி திம்ரி கேரக்டர் இரண்டு ஆண்களால் கர்ப்பமானது போன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இது ஒரு அறிவியல் கதை அம்சம் கொண்டது என்றும் வெகு அரிதாக இரண்டு ஆண்களுடன் இணையும்போது இரண்டு ஆண்களாலும் கர்ப்பம் ஆவது நடைபெறும் என்ற அறிவியல் அம்சத்தை கொண்டு இந்த படம் நகைச்சுவையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்கி  கௌசல்   மற்றும் அமி விர்க் என்ற இரண்டு நாயகர்கள் இந்த படத்தில் நடிக்க, கரண் ஜோஹர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க கிளாமராக இருக்கும் என்றும் இந்த படம் இளசுகளை கவரும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement