கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலர் தங்களது சினிமா கேரியேரில் உச்சநிலையை பெற்றிருந்தாலும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியை தழுவியுள்ளனர். சமீப காலமாகவே தமிழ்த் திரையுலகினர் மத்தியில் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. தற்போது பிரபல இயக்குனரான சீனு ராமசாமி வாழ்க்கையிலும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர்தான் சீனு ராமசாமி. மக்களின் வாழ்வியலை மிக அழகாக திரைக்கதையாக மாற்றும் திறமை கொண்டவர். இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அது மட்டும் இல்லாமல் மாமனிதன், தர்மதுரை போன்ற படங்களையும் இயக்கி பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
d_i_a
இதை தொடர்ந்து பெரும் முயற்சிகளுக்கு மத்தியில் யோகி பாபு நடிப்பில் கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தை திரையிட்டார். இந்த படம் தியேட்டர்களில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை ஓடிடியில் வெளியிட்டார்கள். இந்த படம் வெளியாகும் முன்பே சர்வதேச திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது முடிவு தொடர்பில் எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவர் தெரிவிக்கையில், அன்பானவர்களுக்கு வணக்கம்.. நானும் எனது மனைவி தர்ஷனாவும் எங்களுடைய 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடை பெறுகின்றோம். இருவரும் விவாகரத்து பெற்று அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எந்த விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதையும் நான் அறிவேன். அவரும் அறிவார்.
இந்தப் பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு அதன் உரிமைக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கும் ஊக்கம் அன்புடன் சீனு ராமசாமி எனக் குறிப்பிட்டுள்ளார்..
Listen News!