• Jan 27 2023

மிமிக்கிரி பண்ணி அசத்திய அமுதவாணனின் மகன்... ஆச்சரியத்தில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்... வெளியானது ப்ரோமோ..!

Listen News!
Prema / 4 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதன் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி 11 வாரங்களை அண்மித்துள்ளது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மீதமாக 9 பேர் மாத்திரமே எஞ்சி உள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் எஞ்சி உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். அந்தவகையில் தற்போது மைனா மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


அதில் அமுதவாணன் குடும்பத்தினரின் வீடியோ காட்டப்பட்டுள்ளது. அதில் அமுதவாணன் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டுக்குள் உள் நுழைகின்றனர். மேலும் அமுதவாணனின் மகன் மிமிக்கிரி பண்ணிக் காட்டுகின்றார். அந்தவகையில் ஷிவின், அசீம், விக்ரமன் ஆகியோர் மாதிரி பேசிக் காட்டியும் நடித்துக் காட்டியும் அசத்தி உள்ளனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement