தன்னுடைய இயற்கையான நடிப்புத் திறமை மற்றும் அழகிய தோற்றம் என்பன மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் அமலா பால். கடந்த சில மாதங்களாக சினிமா உலகத்திலிருந்து ஓரளவு விலகியிருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.
கடந்த வருடம் அவர் தாயானது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர் பெற்ற ஆண் குழந்தை தற்போது அமலாவின் வாழ்வில் முக்கிய திருப்புமுனையாகவே மாறியுள்ளது. தற்போது அமலா தன் குழந்தையை வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.
அமலா பாலின் வாழ்வில் தாய்மையால் ஏற்பட்ட மாற்றம் மிகவும் அழகாகனதாக இருக்கின்றது. நடிகையாக இருந்த அவரின் பிஸியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தற்பொழுது தன் குழந்தைக்காக தனது முழு நேரத்தையும் செலவழித்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கேரளாவின் காசர்கோடு என்ற அழகிய இடத்திற்கு சென்றிருக்கின்றார். தன்னுடைய இன்பமான தருணங்களை பிரபலமாக்கும் வகையில், தனது சமூக வலைத்தள பக்கங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்புகைப்படத்தில் அமலா பால் மிகவும் அழகாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!