பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எட்டு போட்டியாளர்களே எஞ்சி உள்ளார்கள். இறுதியாக இடம்பெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றது. இதில் ராயன் முதலாவது போட்டியாளராக ஃபைனலுக்குள் நுழைந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சனம் செட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ராணவ் எலிமினேட் ஆனதை கண்டித்து விஜய் சேதுபதியின் கோஸ்ட் சரியில்லை எனவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வழக்கமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டால் சனம் செட்டி அதனை விமர்சனம் பண்ணுவது வழக்கமான ஒன்றாக காணப்படும். அதில் விளையாடம் போட்டியாளர்களின் திறமை, நேர்த்தி, மைனஸ் என்பவற்றை எடுத்துச் சொல்லுவார்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மஞ்சரி இருக்கும் போது விஜய் சேதுபதி ஒவ்வொரு முறையையும் மஞ்சரியை அவமானப்படுத்தும் விதத்தில் கேள்வி கேட்பதாகவும், மஞ்சரியை கேள்வி கேட்கும் அளவிற்கு சௌந்தர்யாவை விஜய் சேதுபதி கண்டிப்பதில்லை எனவும் தனது கருத்தை முன் வைத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தற்போது ராணவின் எலிமினேஷன் ஒத்துக்கொள்ள முடியாது. இந்த சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் சிஷ்டம் சரி இல்லை என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!