சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி மற்றும் சந்தானம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் மத கஜ ராஜா. இந்த படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸாக உள்ளது.
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் - சந்தானத்தின் காமெடி கலந்த கூட்டணியில் மத கஜ ராஜா திரைப்படம் என்டர்டெயின்மென்டாக உருவாகி உள்ளது . இந்த படத்திற்கு நீண்ட நாட்களாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இடம் பெற்று வருகின்றன.
d_i_a
இந்த நிலையில், மத கஜ ராஜா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கடும் காய்ச்சலுடன் பங்கேற்றுள்ளார். அவர் பாரம்பரிய உடையில் வந்துள்ளதோடு கண்களில் கண்ணாடி போட்டு வழமையான கலகலப்பு இல்லாமல் காணப்பட்டார்.
இதை தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத நிலையில் விஷால் மைக்கை பிடித்து பேசும் போது அவருடைய கைகள் நடுங்கின. இதனால் படக்குழுவினர் உடனடியாக அவரைச் ஷேர் போட்டு அமர வைத்துள்ளார்கள். அதன் பின்பு அவருக்கு ஜுரம் இருப்பதாகவும் இதனால் தான் அவரால் பேச முடியவில்லை என்றும் பட குழுவினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டிலேயே மத கஜ ராஜா படத்திற்கான சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு இந்த படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தயாரிப்பாளர்களின் நிதி பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களினால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது தான் அனைத்திற்கும் தீர்வாக இந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.
What happened to Vishal🙁
His hand was so shaking & can't even able hold Mic !!#MadhaGajaRaja pic.twitter.com/UiXez0b5lZ
Listen News!