• May 10 2024

தனிப்பட்ட முறையில் அஜித் சேருக்கு இதைப் பண்ணனும்-சூப்பர் விஷயம் பகிர்ந்த யுவன்!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இசையமைப்பானராக வலம் வருபவர் தான் யுவன் ஷங்கர் ராஜா.இவர் இசையமைப்பில் வெளியாகிய அனைத்து பாமல்களும் சூப்பர் ஹிட் எனலாம். இதனால் ஏராளமான இளம் ரசிகர்களை தனது இசையால் கவர்ந்துள்ளார். 

மேலும் இவர் நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.அத்தோடு யுவனும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார்.


இதில், #AskU1 என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமான கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதில் பலவற்றிற்கு வீடியோவை பதிவிட்டு பதில்களையும் தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. விஜய்யுடனான சந்திப்பு பற்றியும், செல்வராகவன் கேட்ட நானே வருவேன் கேள்வி குறித்தும், சிம்பு திரைப்படத்தில் வரும் பாடல் என பல விஷயங்களுக்கு அசத்தலான பதில்களை யுவன் ஷங்கர் ராஜா கூறி இருந்தார்.

அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் நடிகர் அஜித் குமார் குறித்தும், அவருடன் அடுத்த திரைப்படம் குறித்தும் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா, "இத்தனை ஆண்டுகள் அவருடன் பணிபுரிந்த போது நிறைய அற்புதமான தருணங்கள் அரங்கேறி உள்ளது. 

ஒவ்வொரு படத்திற்கும் இசையமைத்து முடித்த பின்னர், சிறப்பாக உள்ளது என பாராட்டுவார். மிகவும் அற்புதமான மனிதர். தனிப்பட்ட முறையில், நான் அஜித் சாருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புவேன். விரைவில் அவரது படத்தில் பணியாற்றுவேன்" என  கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement