• Nov 01 2024

விஜயகாந்தின் மனைவி மற்றும் மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த அஜித்

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் மறைவால் ஒட்டுமொத்த சினிமா துறையில் கலக்கத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவுக்காக பல்வேறு விஷயங்களை செய்த கேப்டன் இப்போது இல்லை என அவரது உடலை பார்த்து பல பிரபலங்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இவருடைய உடலுக்கு மக்களும், திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.


இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் நடிகர் விஜய்யை இப்படி பார்த்ததே இல்லை. அப்படி மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதார்.


அந்த வகையில் தற்பொழுது,விஜயகாந்தின் மறைவிற்கு அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.மேலும் துபாயில் இருப்பதால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement