• Apr 24 2024

நீச்சல் குளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் போடும் நடிகை ஸ்ரேயா- மகள் ராதா இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தின் மூலம், துணை நடிகைாக அறிமுகமாகியவர் தான் ஸ்ரேயா.இப்படத்தைத் தொடர்ந்து மழை கந்தசாமி சிவாஜி அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் ஸ்ரேயா தொடர்ந்து நடித்து வந்தார். சமீபத்தில், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'RRR' படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு சில நிமிடங்கள் வந்து போனாலும்… உணர்ச்சிகளை கொட்டி நடித்திருந்தார். எனவே இவருடைய இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா கைவசம் தற்போது, 5 படங்கள் உள்ளது.

தமிழில் நரகாசுரன், மற்றும் சண்டைக்காரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் இரண்டு ஹிந்தி படங்களிலும் ஒரு கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் பொழுதை ஜாலியாக கழித்து வரும் இவர், நீச்சல் குளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் போட்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement