• Dec 08 2023

நள்ளிரவில் மருத்துவமனைக்கு அவசரமாக சென்ற நடிகர் விஜய்! திடுக்கிடும் காரணம்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனை அறிந்த நடிகர் விஜய் நேரில் மருத்துவமனைக்கு சென்று அவரை  பார்த்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற லியோ வெற்றி விழா முன்னெற்பாடுகளை தொடர்ந்து கவனித்து வைத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்துக்கு இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை உடனே சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


குறித்த செய்தியை அறிந்த நடிகர் விஜய் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்துள்ளார். 

இதேவேளை, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் உள்ளதோடு, விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement