• Sep 21 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் நடிகர் என பல்வேறு திறமை கொண்டு ரசிகர்களிடத்தே தனக்கென ணரு இடத்தை பிடித்தவர் தான் விஜய் ஆண்டனி.

மேலும் இவர் சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் .

இப்படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், TN 07 AL 4777, உத்தம புத்திரன் போன்ற பல படங்களுக்கு தனது இசை மூலம் ஹிட் கொடுத்தவர்.

இதன்பின், நான் எனும் படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து வெற்றியும் கண்டார்.

எனினும் இதனைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் என்று நடிப்பில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை ரூ. 6 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே ரூ. 3 - 4 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது ரூ. 6 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement