• Jan 18 2025

பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த நடிகர் சூர்யா! பேரதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் பிரபலங்களுக்கு பெயரோடு சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் இதில் போட்டி போட்டு பங்கு கொண்டு வருகின்றார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனில் கால் பதித்துள்ளது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இம்முறை 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில்  இருந்து தற்போது இரண்டு பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகர் சூர்யா என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக தெலுங்கு பிக் பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார் சூர்யா.


பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையிலேயே தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் நடிகர் சூர்யா என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் தமிழ் பிக் பாஸ் வீட்டில்  தீபாவளி அன்று சூர்யா என்ட்ரி கொடுப்பார் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement